Mar 18, 2025 - 12:19 PM -
0
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் Dunedin மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த போட்டி 15 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக அணித்தலைவர் சல்மான் அகஹா 46 ஓட்டங்களையும் சதாப் கான் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் Jacob Duffy, Ben Sears, ஜேம்ஸ் நீஷாம், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர், 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான Tim Seifert மற்றும் பின் எலனின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 13.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பாக Tim Seifert 45 ஓட்டங்களையும் பின் எலன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.