Mar 18, 2025 - 12:29 PM -
0
குளோபல் ஃபினான்ஸ் நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் சிறந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) வங்கியாக கொமர்ஷல் வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, கொமர்ஷல் வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த சர்வதேச விருதினை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கௌரவமிக்க விருதின் சமீபத்திய வெற்றியாளர்களை அறிவித்த குளோபல் ஃபினான்ஸ் ஆனது இது தொடர்பாக தெரிவிக்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் (SME) தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வங்கிகள் மற்றும் நிதியியல் சேவை வழங்குநர்கள் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், இதற்கிணங்க சஞ்சிகையின் ஆசிரியர்கள் புறநிலை மற்றும் அகநிலை காரணிகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ளுஆநு வங்கிகளை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளது.
கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து, அந்தந்த நாடுகளில் சிறந்த SME வங்கிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், Calibre of Bank of America - அமெரிக்கா Lloyds வங்கி - ஐக்கிய ராஜ்ஜியம்; கொமர்ஸ் வங்கி - ஜேர்மனி; கிரெடிட் அக்ரிகோல் - பிரான்ஸ்; சுமிடோமோ மிட்சுய் Financial Group - ஜப்பான்; DBS - சிங்கப்பூர்; HSBC - ஹோங்கொங்; HDFC - இந்தியா மற்றும் டச் - பங்ளா வங்கி - பங்களாதேஷ் ஆகியவை அடங்கும்.
கொமர்ஷல் வங்கி அதன் SME துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, வங்கியின் ஒட்டுமொத்த முற்பண துறையில் இந்தப் பிரிவின் பங்களிப்பை அதிகரித்து அதன் சந்தைப் பங்கை விரிவுப்படுத்துகிறது. இந்தத் துறையின் பல்வகைப்படுத்தல் மற்றும் வங்கி வழங்கும் அர்ப்பணிப்புள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன.
கொமர்ஷல் வங்கியானது SMEயினரை ஆதரிப்பதற்காக அண்மையில் மேற்கொண்ட முயற்சிகளில் கொமர்ஷல் வங்கி லீப் குளோபல் லிங்கர் (LEAP Global Linker) மற்றும் கொம்பேங்க் டிரேட் கிளப் (‘ComBank Trade Club’) ஆகியவை அடங்கும், இவ்விரண்டு முயற்சித்திட்டங்களும் வர்த்தகங்கள் உலகளாவிய சந்தைகளில் ஊடுருவதற்காக உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் வங்கியினால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கொமர்ஷல் வங்கியானது SME வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரத்தியேக வர்த்தக கழகத்தையும் (Biz Club) கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பிஸ் கிளப் ஆனது புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கடன் வழங்குவதற்கு அப்பால் கல்வி, வலையமைப்பு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து நிபுணத்துவ ஆலோசனை மூலம் ஆதரவை வழங்குவதற்கும் SME வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கிறது.6,250 க்கும் மேற்பட்ட SME துறையினர் தற்போது கொமர்ஷல் வங்கியின் பிஸ் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொமர்ஷல் வங்கியானது இந்த அனைத்து முயற்சிகளுக்கும் மேலாக, 2,200க்கும் மேற்பட்ட நிதியியல் அறிவு திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் இதன் மூலம் வங்கியின் சுமார் 15,000 நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (MSME) வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர்.