Mar 18, 2025 - 01:07 PM -
0
இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசி மருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு குறித்த ஒப்பந்ததை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசிமருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தைக் கொண்ட 6,000 குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக, 03 விலைமனுக்கள் கிடைத்துள்ளன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களுடன் குறைந்த விலைமனுதாரரான இலங்கையைச் சேர்ந்த M/s Lifecerll Interventions (Pvt) Ltd (Manufacturere – Genova Biopharmaceuticals Limited, India) இற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.