சினிமா
'டிராகன்' திரைப்படத்தின் OTT ரிலீஸ்.. வெளியான அப்டேட்

Mar 18, 2025 - 01:24 PM -

0

'டிராகன்' திரைப்படத்தின் OTT ரிலீஸ்.. வெளியான அப்டேட்

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி உலகளவிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. 

இதனிடையே, 'டிராகன்' திரைப்படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. தமிழை தொடர்ந்து பொலிவுட்டிலும் 'டிராகன்' திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், 'டிராகன்' திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி OTT தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்கில் வசூல் குவித்த 'டிராகன்' OTT தளத்தில் வெளியாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05