Mar 18, 2025 - 02:03 PM -
0
இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று இன்று (18) காலை கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூழ்கிய படகு சுமார் 65 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனவும், கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
--