Mar 18, 2025 - 04:01 PM -
0
மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல் ஆகிய குளங்களை புனரமைப்புக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் 3,000 கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்து விவசாயிகள் இன்று (18) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று காலை 9 மணிக்கு வவுணதீவு பிரதேச செயலக்தின் முன்னாள் விவசாயிகள் ஒன்று திரண்டனர்.
இதனையடுத்து மாகாண நீர்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளை செய், கண்டியனாறு திட்டம் கைவிடப்பட்டதா? பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன பிரதேச செயலாளரே? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? விவசாயிகளே விழித் தொழுங்கள் போன்ற வாசகங்கள் எந்தியவாறு சுமார் ஒருமணித்தியாலம் கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.