Mar 18, 2025 - 04:46 PM -
0
SLIIT நிறுவனம் தற்பொழுது இலங்கையின் மிகப்பெரிய தனியார் உயர் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், கல்வியின் முன்னோடி, கல்வியின் சிறப்பு மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளுக்காக அர்ப்பணிப்பைக் கொண்ட நிறுவனமாகப் புகழ்பெற்றுள்ளது. SLIIT இல் காணப்படும் ஆற்றல் மிக்க சூழல் மாணவர்களை கல்வியின் சிறப்புக்கு அப்பாலான பயணத்திற்கு எடுத்துச் செல்வதுடன், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்களுக்குத் தம்மைத் தயார்ப்படுத்தக் கூடிய விரிவான பல்கலைக்கழக அனுபவத்தை வழங்குகின்றது. SLIIT இன் ஆரவராம் நிறைந்த தாழ்வாரங்கள் மற்றும் விரிவுரை அறைகளுக்கு அப்பால் காணப்படும் செழிமையான பல்கலைக்கழக வாழ்க்கையானது எதிர்காலத் தொழில்களை மேம்படுத்தி, துறைசார் நிபுணர்களை வளர்த்து, நாளைய தலைவர்களை உருவாக்குகின்றது.
மாணவர்களின் பல்துறைசார் செயற்பாடுகளே பல்கலைக்கழகத்தின் இதயமாகும். ஈடுபாடு கொண்ட SLIIT மாணவர் சமூகங்கள் வருடாந்த SLIIT Walk, The Charity, SLIIT Get-Together மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டமான Wasantha-Muwadora – போன்ற நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கின்றன. இந்த நிகழ்வுகள் மூலமான ஒன்றுகூடல்கள் பல்வேறு பீடங்களில் உள்ள மாணவர்கள் மத்தியில் உறவுப் பாலத்தை ஏற்படுத்தவும், மாணவர்களை இணைப்பதிலும், நீடித்த நட்புக்கள் மற்றும் துறைசார் வலையமைப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. மாணவர்களிடையே சமூக சேவையின் மதிப்புகளை வளர்ப்பதன் மூலமும், பல்வேறு தொண்டு முயற்சிகள் மூலமும் சமூகப் பொறுப்புக்கான அர்ப்பணிப்புக்களையும் இவை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் பெருமைக்குரிய கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான கொண்டாட்டங்கள் மூலம் SLIIT இல் கலாசார பல்வகைமை உறுதிப்படுத்தப்படுகின்றது. தமிழ் கலாசாரம் மற்றும் கலைகளின் மெய் மறக்கவைக்கும் கொண்டாட்டமான ‘கலாகேந்ரா’ முதல் இஃப்தார் ஆன்மீக ஒன்கூடல் வரையான நிகழ்வுகள், தோரணம், தானம், பிரித் ஓதும் நிகழ்வு ஆகியவற்றின் பாரம்பரிய தாராள மனப்பான்மை முதல் கிறிஸ்துமஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு வரையில் இலங்கையின் கலாசாரத்தின் பிரம்மாண்டம் கம்பஸில் காணப்படுகின்றது. பீடங்களுக்குரிய நிகழ்வுகளான விராமய (Viramaya), லன்தறும (Lantharuma), கன்தெர (Ganthera), ஹன்தாவ (Handawa), வோக்ஃபெஸ்ட் (VogueFest), உணவுத் திருவிழா (Food Festival), SLIIT Talks, இரத்ததானம், தொழில் கண்காட்சி மற்றும் SLIIT's Got Talent உள்ளிட்டவை துடிப்பான பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் பங்களிக்கின்றன.
ஒட்டுமொத்த மேம்பாட்டில் நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு அதன் அதிநவீன தொழில்நுட்ப வதிகளின் ஊடாகப் பறைசாற்றப்படுகின்றது. ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன விரிவுரை மண்டபங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊடாட்டம் நிறைந்த சூழலாக மாற்றுவதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஆய்வுகூடங்கள் புதுமை மற்றும் ஆய்வுகளின் போது சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. நூலகத்தின் Learning Commons வசதியானது விரிவான வளங்கள் மற்றும் கற்பதற்கான இடத்தை வழங்குவது மாத்திரமன்றி, மாணவர்கள் கற்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவதற்கும், மாணவர்கள் இடையே கலந்துரையாடல்களை நடத்தி கூட்டாகக் கற்பதற்குமான சூழலை உறுதிப்படுத்துகின்றது.
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு SLIIT இல் காணப்படும் விளையாட்டு வசதிகள் அவர்களின் வீடுகளை நினைவுபடுத்துகின்றன. வில்வித்தை, பட்மின்டன், கூடைப்பந்து, கரம், சதுரங்கம், கிரிக்கெட், உதைபந்து, ஃபுட்ஸால், ஹொக்கி, கராத்தே, கலப்பு தற்காப்புக் கலை, வலைப்பந்து, ரக்பி, நீச்சல், மேசைப்பந்து, டெனிஸ், டைக்குவாண்டோ, தடக்களம், பழுதூக்குதல் மற்றும் கரப்பந்து போன்ற பரந்துபட்ட போட்டிகளில் மாணவர்கள் போட்டியிடுவதுடன், விளையாடி மகிழ்கின்றனர். மாலபே கம்பஸ் வளாகம் உள்ளக மற்றும் வெளியாட்டு விளையாட்டு வசதிகளைக் கொண்டிருப்பதுடன், இதில் விளையாட்டு மைதானம், பட்மின்டன், கூடைப்பந்து மற்றும் கரப்பந்துக்கான உள்ளக மைதானங்கள், டெனிஸ் மைதானம், நீச்சல் தடாகம், முழுமையான வசதிகளைக் கொண்ட பயிற்சி மையம் ஆகியவை உள்ளடங்குகின்றன.
மாணவர்களின் வாழ்க்கை தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு SLIIT விரிவான ஒத்துழைப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. துறைசார் உளவியல் ஆற்றுப்படுத்தல் வசதிகள் மாணவர்களின் சுகாதார மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துகின்றது. மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்வாழ்க்கையில் முக்கிய பங்காகவிருக்கும் தொழில்துறைக்கான வெளிப்பாட்டை SLIIT ஏற்படுத்திக் கொடுப்பதுடன், தொழில்துறையில் உள்ள நிறுவனங்களுடன் கொண்டுள்ள வலுவான கூட்டாண்மைகள் மூலம் தொழில்வாய்ப்புக்கான நேரடி அனுபவத்தையும் வழங்குகின்றது. கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை தொழில் வழிகாட்டல் பிரிவு குறைப்பதுடன், வெற்றிகரமான தொழில்முறை வாழ்க்கைக்கு மாணவர்களை வழிப்படுத்துகின்றது. தொழில்நுட்பம், தொழில்முனை முதல் கலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு நலன்களைப் பூர்த்தி செய்யும் வகையிலான 50 க்கும் மேற்பட்ட சங்கங்கள் மாணவர்கள் தங்கள் ஆர்வங்களைத் தொடரவும், தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்வதற்குமான தமது திறன்களைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கின்றன.
SLIIT இல் மாணவர்களுக்கான வாழ்க்கை என்பது கடுமையான கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துறைசார் நிபுணர்களுக்கான அறிவைப் பெறுவதற்கும், மென் திறன்களை வளர்ப்பதற்கும், கலாசார விழிப்புணர்வையும் சமூகப் பொறுப்பையும் உருவாக்குவதற்கு ஒரு வலுவான தளமாக அமைகின்றது. இவை அனைத்தும் இன்றைய உலகளாவிய சூழலில் வெற்றிக்கு அவசியமானவையாகும். SLIIT இல் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கும், தம்மை வளர்ச்சியடையச் செய்வதற்கும், உலகில் தங்களை புதிய முத்திரையைப் பதிப்பதற்கான திறமையான நபர்ளாக மாற்றும் வாய்ப்புக்களை வழங்கும் நாட்களாக அமைகின்றன.
மேலதிக தகவல்களுக்கு www.sliit.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.