சினிமா
9 வயதில் ஆண், பெண் இருவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்

Mar 18, 2025 - 04:52 PM -

0

9 வயதில் ஆண், பெண் இருவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்

'ஆன்ட்-மேன் அன்ட் வேஸ்ப்: க்வான்டமேனியா (ANT-MAN AND WASP : QUANTUMANIA)', 'தி ஹார்டர் தே ஃபால் (THE HARDER THEY FALL)' போன்ற திரைப்படங்கள் மூலம் பரிச்சயமானவர் ஹாலிவுட் நடிகர் ஜொனாதன் மேஜர்ஸ். குறிப்பாக, லோக்கி(LOKI ) சீரிஸில் இவர் ஏற்று நடித்த கேங் (KANG) கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. 

சமீபத்தில் பிரபல ஹாலிவுட் செய்தி ஊடகமான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு பேட்டி அளித்த ஜொனாதன் மேஜர்ஸ் தான் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார். அதில், ``எனது ஒன்பது வயதில் ஆண்கள் பெண்கள் இருவராலும் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். என் அப்பா இல்லாத சமயத்தில் என்னை யார் பார்த்துக் கொள்ள வேண்டுமோ அவர்களாலேயே துன்புறுத்தலுக்கு ஆளானேன்" என்றார். 

மேலும் அவர் சமீபத்தில்தான் தன் தாயாரிடம் இதைப் பற்றி பகிர்ந்ததாக தெரிவித்தார். ``நான் என் அம்மாவிடம் `இது பெரிய விஷயம் இல்லை. உங்களிடம் கூற வேண்டும் என்று தோன்றியது. இனி நாம் வேலையில் கவனம் செலுத்தி இதிலிருந்து மீண்டு வெளியேற முயற்சி செய்வோம்' என்றேன்" எனக் கூறினார். ஜொனாதன் மேஜர்ஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை அடித்து துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். 

குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக சிறைத் தண்டனை வழங்காமல் ஒரு வருடம் மனநல ஆலோசனை பெறுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு காரணமாக தன் கைவசம் இருந்த பல திரைப்பட வாய்ப்புகளையும் இழந்தார் ஜொனாதன் மேஜர்ஸ். இரண்டு ஆண்டுகளாக எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்காத நிலையில், தற்போது தனது வாழ்க்கை குறித்தும் வழக்கில் நடந்தவை குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05