சினிமா
"குட் பேட் அக்லி" படத்தின் முதல் பாடல் வௌியானது

Mar 18, 2025 - 05:15 PM -

0

"குட் பேட் அக்லி" படத்தின் முதல் பாடல் வௌியானது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாக உள்ளது. 

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஓஜி சம்பவம்...குட் பேட் அக்லி முதல் பாடலில் அஜித்தின் அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெற உள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05