Mar 18, 2025 - 05:35 PM -
0
பொலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அமீர் கான். இவர் ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இருவரை திருமணம் செய்து, விவாகரத்தும் செய்துவிட்டார்.
இப்படியிருக்க கடந்த சில நாட்களுக்கு முன் தனது புதிய காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 6 வயது குழந்தைக்கு அம்மாவாக உள்ள கௌரிஸ் ஸ்பிராட் என்பவரை கடந்த 18 மாதங்களாக காதலித்து வந்துள்ளார் அமீர் கான். கூடிய விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருடைய மூன்றாவது திருமணம் குறித்த பேச்சு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, அமீர் கானின் மகள் இரா கான் அழுதுகொண்டே காரில் போகும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரா கான் சமீபத்தில் தனது அப்பா அமீர் கானை சந்தித்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தபோது, கண் கலங்கிப்படி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நுபுர் ஷிகாரே என்பவருடன் அமீர் கானின் மகள் இரா கான் பதிவு திருமணம் செய்துகொண்டார். இதன்பின், திரையுலக பிரபலங்கள் சூழ, கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், இரா கான் சோகமான முகத்துடன் அப்பாவை வந்து சந்தித்துவிட்டு செல்லும்போது, திடீரென எமோஷனலாகி கண் கலக்கிய நிலையில், காரில் சென்றதை பார்த்த ரசிகர்கள், அவருடைய திருமணம் பிரச்சனையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது பொலிவுட்டில் சர்ச்சையாகியுள்ளது.