கிழக்கு
அம்பாறை மாவட்டத்தில் முடங்கிய தபால் சேவைகள்

Mar 18, 2025 - 05:40 PM -

0

அம்பாறை மாவட்டத்தில் முடங்கிய தபால் சேவைகள்

நாடளாவிய ரீதியில் தபால் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. 

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் இரு நாட்களாக முடங்கியுள்ளன. 

இதன்படி கடந்த நேற்று (17) உட்பட அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபால் நிலையங்கள் தவிர 7 தபால் நிலையங்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05