செய்திகள்
இளைஞர்கள் விரும்பும் தொலைக்காட்சி அலைவரிசை டிவி தெரண

Mar 19, 2025 - 06:17 AM -

0

இளைஞர்கள் விரும்பும் தொலைக்காட்சி அலைவரிசை டிவி தெரண

 2025 ஆம் ஆண்டிற்கான SLIM-KANTAR மக்கள் விருதுகளில் "ஆண்டின் இளைஞர்கள் விரும்பும் தொலைக்காட்சி அலைவரிசைக்கான" விருதை இந்த முறையும் டிவி தெரண (TV Derana) தனதாக்கியுள்ளது.


2025 SLIM-KANTAR மக்கள் விருது விழா நேற்று (19) இரவு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.


இதில், "ஆண்டின் மக்கள் தொகுப்பாளர்"  SLIM-KANTAR விருதை 8ஆவது முறையாக சத்துர அல்விஸ் (Chatura Alwis) தனதாக்கினார்.


2025 SLIM-KANTAR மக்கள் விருது விழாவில் "மக்கள் நடிகர்" விருதை சஜித அந்தோனி (Sajitha Anthony) மற்றும் ஹேமால் ரணசிங்க (Hemal Ranasinghe) ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். "மக்கள் நடிகை" விருதை மாலனி பொன்சேகா (Malani Fonseka) பெற்றுக் கொண்டார்.


"ஆண்டின் மக்கள் பாடகர்" விருதை சாமர வீரசிங்க (Chamara Weerasinghe) வென்ற நிலையில்,  "ஆண்டின் மக்கள் பாடகி"  விருதை ஷஷிகா நிசங்கலா (Shashika Nisansala) தட்டிச் சென்றார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05