Mar 19, 2025 - 11:56 AM -
0
இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான நியு அந்தனீஸ் குரூப், Profood Propack & Agbiz 2024 கண்காட்சி நிகழ்வில் மீண்டும் ஒரு தடவை Best Stall - Agri Biz விருதை பெற்றுள்ளது. அண்மையில் பெற்றுக் கொண்ட இந்த விருதினூடாக, தரத்துக்கான அதன் அர்ப்பணிப்பை உறுதி செய்வது மாத்திரமன்றி, இலங்கையில் அன்ரி-பயோடிக் இல்லாத கோழி இறைச்சி உற்பத்தியாளர் எனும் தமது நிலையையும் மேலும் உறுதி செய்துள்ளது.
வருடாந்த நிகழ்வு 21ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதனை உடன் LECS இணைந்து இலங்கை உணவு பதப்படுத்தல் சம்மேளனம் (SLFPA) ஏற்பாடு செய்திருந்தது. உணவு பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாய வியாபார துறைகளைச் சேர்ந்த முன்னோடிகள் மற்றும் பங்காளர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
நியு அந்தனீஸ் குரூப் கோழி இறைச்சி துறையில் தனது HarithaHari வர்த்தக நாம தயாரிப்புகளை அறிமுகம் செய்து, புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் அன்ரி பயோடிக் இல்லாத முதலாவது கோழி இறைச்சி வகையாக இது அமைந்திருப்பதுடன், சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான கோழி இறைச்சியாகவும் அமைந்துள்ளது. உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் அன்ரி பயோடிக் பாவனையை வெற்றிகரமாக இல்லாமல் செய்துள்ளது.
நுகர்வோர் ஆரோக்கியமான மற்றும் நிலைபேறான மற்றும் ஒழுக்கமான பண்ணைச் செயற்பாடுகளினூடாக உற்பத்தி செய்த கோழிஇறைச்சியை பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதுடன், இந்த திட்டத்தினூடாக உணவு பாதுகாப்பு, நுகர்வோர் நலன் மற்றும் சூழல் பொறுப்புத் தன்மை ஆகியவற்றை நியு அந்தனீஸ் குரூப் உறுதி செய்கிறது. HarithaHari கோழி இறைச்சி கட்மியம் மற்றும் நாகம் போன்ற பாரமான உலோகங்கள் இல்லாதது என்பதுடன், எவ்விதமான செயற்கை ஹோர்மோன்கள், பதப்படுத்திகள் அல்லது இரசாயனப் பதார்த்தங்களும் அற்றது.
இந்த உயர் நியமங்களை பேணுவதற்காக அந்தனீஸ் ஆழமான படிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அதில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் இலங்கையின் முன்னணி தொழிற்துறை ஆய்வுகூடங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் போன்றன அடங்கியுள்ளன. அத்துடன் விலங்கு நலன்பேணலில் உயர் நியமங்களையும் பேணுவதுடன், NCC இனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச சிறந்த செயன்முறைகளை பின்பற்றி, நுகர்வோர் உயர் தரமான, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கோழி இறைச்சியை பெறுவதை உறுதி செய்கின்றது.
நியு அந்தனீஸ் குரூப் தொழிற்துறையின் மிகவும் கடினமான சான்றிதழைப் பெற்றுள்ளது. அதனூடாக தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னோடி எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது. இலங்கையில் FSSC 22000 சான்றிதழைப் பெற்றுள்ள ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராக மாத்திரம் இது திகழாமல், தொழிற்துறையில் இதனை பெற்றுள்ள முன்னோடியாகவும் அமைந்துள்ளது. தொழிற்துறையின் உயர் நியமங்களை பின்பற்றுகின்றமைக்காக இதர பல்வேறு கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது. உணவு பாதுகாப்புக்காக விஞ்ஞானபூர்வ வழிமுறைக்காகவும் வெளிப்படைத்தன்மைக்காக அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்காகவும், சுகாதாரத்தில் அக்கறை கொண்டுள்ள நுகர்வோர் எனும் வகையில் HarithaHari நம்பிக்கை வாய்ந்த தெரிவாக திகழ்கிறது.