Mar 19, 2025 - 01:24 PM -
0
இலங்கையின் நிதி சார்ந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Royal Asset Holdings தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் பொற் கடன் சேவை வழங்குநர் எனும் விருதையும் People's Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிறுவனம் எனும் விருதையும் வென்றுள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Royal Asset Holdings நிறுவனம் தனியார் மற்றும் வணிகத் தேவைகள் பலவற்றுக்கு தேவையான நிதிச் சேவைகள் வழங்குநராக மங்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. மேற்படி நிறுவனம் வழங்கும் நிதிச் சேவைகளில் வாடிக்கையாளர் கடன், வணிகக் கடன், அடகுச் சேவைகள், நுன் லீசிங், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான கடன்கள், தனியார் கடன்கள், நுன் நிதி கடன், மற்றும் அடகுக் கடன் பிரதானமானவை ஆகும்.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதாக இயங்கும் Royal Asset Holdings நிறுவனம் நெகிழ்வு போக்குடையதும் தனிப்பயனாக்கப்பட்டதுமான நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. வினைத்திறன் மற்றும் நம்பிக்கைமிக்க சேவைகளை வழங்குவதன் மூலம் தனியார் மற்றும் வணிக நிதி நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் அடைவதற்கு இந் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
Royal Asset Holdings நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கம்பஹா பகுதியில் அமைந்துள்ளதோடு நீர்கொழும்பு, சிலாபம், குருணாகல், கேகாலை, புத்தளம், மன்னார், அம்பாறை, பருத்தித்துறை உள்ளிட்ட மேலும் பல இடங்களில் அதன் கிளைகள் அமைந்துள்ளன. அதன் நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, முதலீடு மற்றும் நிதியியலை முதன்மையாக கருதும் Royal Asset Holdings நிறுவனம் தமது தயாரிப்புகளையும் சேவைத் தொகுதியினையும் தொடர்ச்சியாக இற்றைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடன், சர்வதேச வர்த்தகம் மற்றும் அடகுக் கடன் தொடர்பாக சிறப்பு தேர்ச்சியை பெற்றுள்ள இந் நிறுவனம் இதற்கு முன்னரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளது.