வணிகம்
குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை

Mar 19, 2025 - 01:28 PM -

0

குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை

மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை மார்ச் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான உலக குளுக்கோமா (கண் விழி விறைப்பு நோய்) வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு “கண் சொட்டு மருந்துகளின்றி வாழுங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் தொடர் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குளுக்கோமா என்பது கண் பார்வையை சிதைக்கும் எமனாகவே பார்க்கப்படுகிறது. மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை 35 வயதுக்கு பின்னர், “தினந்தோறும் கண்களை பரிசோதித்தல்” எந்தளவுக்கு முக்கியம் என்பதை வலியுறுத்துவதோடு நோயை கண்டறிந்தவுடன் அதற்கான பொது சிகிச்சை வாழ்நாள் முழுவதும் சொட்டு மருந்து பாவனைக்கு வழிவகுப்பதோடு அது நோயாளர்களுக்கு பெரும் சுமையாகிவிடும். அதன் விளைவாக அவருடைய வாழ்க்கையும் துன்பத்தில் ஆழ்ந்து விடும். கண் சொட்டு மருந்துகளின்றி வாழ்வதற்கான ஒரே தீர்வு SLT சிகிச்சை ஆகும். அதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிக பயன்மிக்க சிகிச்சையுமாகும். அது நோயாளருக்கு கண் சொட்டு மருந்தின்றி வாழக்கூடிய சௌகரியத்தை ஏற்படுத்துவதோடு இதுவரை காணப்பட்டுள்ள மிகச் சிறந்த செயன்முறையும் அதுவே ஆகும். 

ஊடக அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை அது எப்பொழுதும் மகத்தானதொரு சிகிச்சை முறை எனவும், அதில் உயர் தரம் பேணப்படுமெனவும் தெரிவித்துள்ளது. சகல பிரஜைகளினாலும் சமாளிக்கக்கூடிய கட்டணத்தில் இச் சிகிச்சை அளிக்கப்படுவதாக தலைமை மருத்துவர் சமன் பஸ்நாயக்க தெரிவித்தார். ISO 9001:2015 சான்றிதழை பெற்றுள்ள இம்மருத்துவமனை வெளி நோயாளர் சிகிச்சை வசதிகள், ENT நோய்களை அடையாளங் கண்டு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது. உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மவுண்ட் லோட்டஸ் மருத்துவமனை இந்த திட்டத்தை செயற்படுத்துவதோடு இந்த நோயினால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதோடு SLT வசதிகள் ஊடாக நோயாளர்களுக்கு ஆகச் சிறந்த சிகிச்சை அளிப்பதே அதன் நோக்கமாகும். 

அம் மருத்துவமனை தமது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், Medicare கண்காட்சியில் தமது நிறுவனத்தின் பங்களிப்பானது, பலருக்கும் தினந்தோறும் கண் சொட்டு மருந்துகளின்றி வாழ்வதற்கு உதவும் SLT சிகிச்சையின் மகத்தான பயனை அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியதாக தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே குளுக்கோமாவை அடையாளங் கண்டு கொள்ளும் பட்சத்தில், கண் சொட்டு மருந்துகளின்றியே SLT சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமெனவும், எவரேனுமொருவர் ஏற்கெனவே கண் சொட்டு மருந்துகளை பாவிப்பாரெனில், எம்மால் அவருடைய சொட்டு மருந்துகளின் அளவை குறைக்கவோ அதன் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தவோ முடியுமெனவும் அந்த மருத்துவமனை தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05