செய்திகள்
தேசபந்துவுக்கு விளக்கமறியல்

Mar 19, 2025 - 02:11 PM -

0

தேசபந்துவுக்கு விளக்கமறியல்

இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், இன்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

 

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05