Mar 19, 2025 - 03:24 PM -
0
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் அசோக சேபால அவர்கள் இன்று (19) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு லிந்துல நகர சபை மற்றும் கொட்டகலை பிரதேச சபை அக்கரபத்தனை பிரதேச சபை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.
அதே நேரம் இம்முறை 12 உள்ளூராட்சி சபைகள் நுவரெலியாவில் காணப்படுகின்றன 12 உள்ளூராட்சி சபைகளிலும் அமோக வெற்றியை ஐக்கிய மக்கள் சக்தி பெரும்.
மக்கள் கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்கினை செலுத்தி இருந்தார்கள் இருப்பினும் அவர்களுக்கு அது ஏமாற்றம் அளித்தது.
முக்கியமாக எமது மலையகத்தில் எந்தவித அபிவிருத்தி மாற்றங்கள் எதுவுமே நடைபெறவில்லை.
அதே நேரம் இம்முறை எமது கட்சியில் இளைஞர்கள் யுவதிகள் பெண்கள் அநேகமானவர்கள் எமது கட்சி ஊடாக தேர்தலில் களம் இறங்குவதற்கு வருகை தந்திருந்தார்கள் இருப்பினும் அனைவருக்கும் நாங்கள் வாய்ப்பைத் தர முடியாவிட்டாலும் முடிந்த அளவு அதில் தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் வாக்குகள் சேகரிப்பதற்காக தீர்மானித்துள்ளதாம் என தெரிவித்தார்.
--