Mar 19, 2025 - 03:59 PM -
0
இலங்கை தகவல் தொழினுட்ப கல்வியகத்தின் (SLIIT) இன் SLIIT CODEFEST 2024: AI Sprint க்கு பிளாட்டினம் அனுசரணை வழங்க Sysco LABS அண்மையில் முன்வந்திருந்தது. இந்த நிகழ்வினூடாக மாணவர்களுக்கு தமது AI ஆற்றலை வெளிப்படுத்தவும், சிக்கல்கள் நிறைந்த, தொழிற்துறைக்கு பொருத்தமான சவால்களுடன் ஈடுபடவும் வாய்ப்பளித்திருந்தது. அண்மைய வரலாற்றில் முதன் முறையாக Sysco LABS இனால் அறிமுகம் செய்யப்பட்ட AI-theme இனாலான செயற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு ட்ரில்லியன் டொலர் நிஜ உலக பிரச்சனைகளுக்கு, சர்வதேச உணவுசேவைத்துறையில் artificial intelligence ஐ பயன்படுத்தி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வழிகோலியிருந்தது.
SLIIT பல்கலைக்கழக வளாகத்தில் இறுதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் சுமார் 200 பங்குபற்றுனர்கள் பங்கேற்றிருந்தனர். அணிக்கு 10 பேரைக் கொண்ட குழுவாக இவர்கள் போட்டியிட்டிருந்தனர். பதிவு செய்யப்பட்ட 156 அணிகளிலிருந்து 19 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் 7 அணிகள், SLIIT இன் 5 அணிகள், றுகுண பல்கலைக்கழகத்தின் 3 அணிகள், IIT இன் 2 அணிகள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 1 அணி மற்றும் NSBM இன் 1 அணி போன்றன அடங்கியிருந்ததுடன், Sysco LABS நிபுணர்களினால் வழிகாட்டலில் hackathon முறையில் நடைபெற்றது.
இந்த பங்காண்மை தொடர்பில் Sysco LABS இன் முகாமைத்துவ பணிப்பாளர் ரசிக கருணாதிலக கருத்துத் தெரிவிக்கையில், “பிரதான அந்நியச் செலாவணியீட்டும் இலங்கையின் தொழினுட்பத் துறை வளர்ந்து வரும் நிலையில், சர்வதேச புத்தாக்க மையமாக நிறுவுவதற்கு தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் திறமை வளர்ந்த வண்ணமுள்ளது. SLIIT CODEFEST நிகழ்வில் AI-மையப்படுத்தப்பட்ட போட்டியில் கவனம் செலுத்துவது என்ற எங்கள் முடிவு, தொழில்நுட்பம் நகர்ந்து வரும் திசையை அடிப்படையாகக் கொண்டது, AI இன் பயன்பாடு ஒவ்வொரு களத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில், இந்தத் துறையின் ஒட்டுமொத்த உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க, இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் திறமையாளர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே AI மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த வேண்டும். போட்டியாளர்கள் AI இன் பல பயன்பாடுகளைத் தொடர்ந்து ஆராய்வார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.” என்றார்.
இறுதிப் போட்டியில், 6 பேர் கொண்ட சிரேஷ்ட Sysco LABS நிபுணர்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்ட shark-tank கருப்பொருள் கொண்ட பிட்ச்சிங் போட்டிக்குப் பிறகு, NSBM இன் CTRL அணி முதலிடத்தைப் பிடித்தது, ருஹுண பல்கலைக்கழகத்தின் Team Inception அணி 2ஆவது இடத்தையும், IIT இன் Team AI Alchemists அணி மற்றும் SLIIT இன் Team Data Wizards அணிகள் கூட்டாக 3ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.
Sysco LABS இன் பொறியியல் மற்றும் வடிவமைப்பு பணிப்பாளர் நிஷாந்த ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “போட்டியில் பங்கேற்ற அனைவரும் மேற்கொண்ட முயற்சியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். Sysco LABS ஆல் இயக்கப்படும் SLIIT CODEFEST 2024 AI Sprint, போட்டியாளர்களுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் AI பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் மட்டுமல்லாமல், டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய உணவு சேவைத் துறையில் நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க AI ஐப் பயன்படுத்தி அன்றாடம் பணிபுரியும் Sysco LABS தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தரமான நேரத்தை செலவிடவும் வாய்ப்பளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவு, அவர்கள் பணியிடத்தில் நுழையும் நேரத்தில் தொழில்துறைக்குத் தயாராக இருக்க உதவும் AI மனநிலையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளத்துடன் கூட்டு சேர்வது, இலங்கை தொழில்நுட்பத் துறையின் வருவாய் திறனை மேம்படுத்துவதற்காக தொழில்துறையின் AI திறன்களை உயர்த்துவதற்கான Sysco LABS இன் முயற்சிகளின் நீட்டிப்பாகும்.” என்றார்.
Sysco LABS பற்றி
Sysco LABS என்பது உலகின் மாபெரும் உணவுச் சேவைகள் வழங்கும் நிறுவனமான Sysco Corporation (NYSE: SYY) இன் புத்தாக்க பிரிவாகும். Fortune 500 நிறுவன தரப்படுத்தலில் 54 ஆம் இடத்தில் Sysco தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்களை உணவகங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் சர்வதேச ரீதியில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும்.
உணவு சேவைகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு அவசியமான சாதனங்கள் மற்றும் பொருட்களையும் கொண்டுள்ளது. 76000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு, உலகளாவிய ரீதியில் 340 க்கு அதிகமான ஸ்மார்ட் விநியோக பகுதிகளை இயக்குவதுடன், 14,000 IoT செயற்படுத்தப்பட்ட ட்ரக்களினூடாக சுமார் 730,000 வாடிக்கையாளர் பகுதிகளுக்கு சேவைகளும் வழங்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனம் 78 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விற்பனைகளை பதிவு செய்துள்ளது. இலங்கை Sysco LABS, இனால் Sysco வின் முடிவு-முதல்-முடிவு செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படுகின்றன.
Sysco LABS இன் enterprise தொழினுட்பம், முடிவு-முதல்-முடிவு உணவு சேவை தொழிற்துறையில் பிரசன்னமாகியிருப்பதுடன், உணவு தயாரிப்புகள், வர்த்தகநாமமிடல்கள், களஞ்சியப்படுத்தல்கள் மற்றும் களஞ்சியசாலை செயற்பாடுகள், ஓடர் வைப்புகள் மற்றும் விலையிடல்கள், உணவு விநியோகம் மற்றும் பொருட்களை விநியோகித்தல் போன்றவற்றை Sysco இன் சர்வதேச வலையமைப்பிலும், வாடிக்கையாளரின் உணவகத்தில் உணவருந்தும் அனுபவத்திலும் பிரசன்னமாகியுள்ளன.