Mar 19, 2025 - 05:54 PM -
0
நோர்வூட் பிரதேச சபையின் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் ஒரு அங்கமாக இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இம்முறை களமிறங்குவதாக இலங்கை தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் டெனியல் ஜெனாஷ்டார் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) மாலை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய நாள் இலங்கை தொழிலாளர் முன்னணிக்கு மாத்திரமல்ல மலையக சமுகத்திற்கும் ஒரு முக்கியமான ஒரு நாளாகும்.
இம்முறை நாங்கள் சந்திக்கவிருக்கும் தேர்தல் கலமானது கிராமத்தை யார் தலைமை ஏற்று நடாத்துவது எமது பிரதேசத்தின் தலைமைத்துவத்தை யார் கையில் கொடுப்பது என்பதனை தீர்மாணிக்கின்ற ஒரு தேர்தல் கலமாக இந்த தேர்தல் காணப்படுகிறது.
எமது பெருந்தோட்ட துறையினை சார்ந்த சகோதர சகோதரிகளை இனைத்துக்கொண்டு தனித்துவமான மலையக பெருந்தோட்ட துறையினரின் சக்தியினை எமது சமுகத்திற்கும் எங்களுடைய நாட்டிற்கும் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.
எமது தீர்மானங்கள் குறித்து வெளியார்கள் பல்வேறு விமர்சனங்கைளை மேற்கொண்டாலும் மலையக பெருந்தோட்ட சமூகத்தினுடைய உரிமைகளையும் அவர்களுடைய வாழ்வியலையும் சரியான திசை நோக்கி கொண்டு செல்வதற்கான தேவைகள் எமக்கு உள்ளது.
எமது மலையக சமுகத்தை காலம் காலமாக பிரதிநிதித்துவப்படுத்தி எமது சமுகத்தை ஒட்டு மொத்தமாக நிர்வகித்து அடிமைத்தன அரசியலை மலையகத்திற்குள் நடத்தி வந்த முதலாளித்துவ தலைமைகளுக்கு சரியான பாடத்தினை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் புகட்டுவோம் என தெரிவித்தார்.
--