Mar 19, 2025 - 06:05 PM -
0
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபைக்காக 12 தொகுதிகளில் இ.தொ.கா சார்பில் சேவல் சின்னத்தில் நேரடியாகவும், தேசிய பட்டியல் ஊடாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (18) கொட்டகலை CLF வளாகத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் வேட்புமனுக்களில் கையெழுத்திட்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையிலேயே வேட்புமனுவில் கைச்சாத்திட்டனர்.
--