Mar 19, 2025 - 07:18 PM -
0
Asia Green Solutions தனியார் நிறுவனம் Pinnacle Sri Lanka விருது விழாவில் Water Solution Provider of the Year எனும் விருதை வென்றுள்ளது. Asia Green Solutions நிறுவனம் கைத்தொழில் துறையில் காணப்படும் பசுமை பொறியியற் தேவைகளுக்கு நிலைபேறானதும் புத்தாக்கமிக்கதுமான தீர்வுகளை வழங்குகிறது.
Water Treatment Solutions, Energy Environmental Solutions, Environmental Engineering Solutions தொடர்பான நிபுணத்துவ அறிவை கொண்டுள்ள அந் நிறுவனத்தின் அனுபவமிக்க திறமையான பணியாட்டொகுதியிடமிருந்து உயர் தர சேவையினை பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனம் வழங்கும் சேவைகளில் Water Treatment Solutions முதன்மை இடத்தை பெறுகிறது. Water Treatment இற்கான விஷேட இராசாயனப் பொருட்கள், நவீன ரக துணைப் பாகங்கள், சிறப்பு கருத்திட்ட முகாமைத்துவச் சேவைகளை வழங்கும் Asia Green Solutions எப்பொழுதும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுமொரு நிறுவனமாகும். Water Audit & Consultation சேவைகளையும் வழங்கும் இந் நிறுவனம் தண்ணீர் பயன்பாட்டை உயரிய மட்டத்தில் பேணவும், செலவை குறைக்கவும், சூழல் தர நியமங்களுக்கு உட்பட்டு செயற்படவும் கைத்தொழில்களுக்கு உதவுகிறது.
சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை நிறுவுதல், கழிவுகளை பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்தல், Heating மற்றும் Cooling Cooling தீர்வுகள் மற்றும் Energy Audit சேவைகளை வழங்குதல் Asia Green Solutions நிறுவனத்தின் சேவைகளின் முக்கிய பிரிவுகளாகும். Environmental Engineering சேவைகளில் கழிவு நீர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவக் கட்டமைப்புகள், தரப் பரிசோதனைகளும் நிலைத்தன்மையும் தொடர்பான ஆலோசனைகள் பிரதானமானவை ஆகும். சுத்தமான நீரை பெறுவது சர்வதேச ரீதியான சவாலாக மாறியுள்ள சூழலில் உயர் தர நீர் இராசாயன மற்றும் பொறியியற் தீர்வுகள் மூலம் அச் சவால்களை வெல்வதே நிறுவனத்தின் நோக்கமாகும். நிலைத்தன்மையையும் புத்தாக்கத்தையும் ஒன்றிணைக்கும் Asia Green Solutions அறிமுகப்படுத்தியுள்ள நீர் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத் தீர்வுகள் மூலம் தமது நடவடிக்கைகளை வினைத்திறனுடன் மேம்படுத்துவதற்கு கைத்தொழிலாளர்களுக்கு வாய்ப்பு உண்டு. சமூகம், வாடிக்கையாளர்கள், சுற்றுச்சூழல் போன்ற சகல சகல தரப்புகளுக்குள்ளும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டுள்ள Asia Green Solutions உள்நாட்டு வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.