Mar 19, 2025 - 07:24 PM -
0
Global Icon 2025 விருது விழாவில் இலங்கையின் ஜனரஞ்சக கேசினோ நிறுவனம் என்ற விருதை Bally’s Casino Colombo நிறுவனம் வென்றுள்ளது. விருது விழா கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் மனித வள உத்தியோகத்தர் திரு ராகுல் அத்தனாக்க மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். தலைமை நிறைவேற்று அதிகாரி டோனி மெக்மிலன், உப தலைவர் (சர்வதேச சந்தைப்படுத்தல்) ஜொனீ பெரேரா, பிரதி முகாமையாளர் (வைபவ நிகழ்வுகள் மற்றும் டஜிட்டல் சந்தைப்படுத்தல்) கசுன் குணவர்தன மற்றும் பணியாட்டொகுதி அங்கத்தவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவின் புகழ்மிக்க சந்தைப்படுத்தல் நிறுவனமான பிரைம் டைம் ரிசர்ச் மீடியா அமைப்பு ஏற்பாடு செய்த இந்த விருது விழாவில் களியாட்ட,கல்வி,சுகாதாரம் போன்ற துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.
1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Bally’s Colombo மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டின் நைட் கிளப் மற்றும் பொழுதுபோக்கு களியாட்டத் துறையின் முதன்மை நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச மட்டத்திலான கேசினோ நிறுவனமான இதற்கு உலகெங்கிலுமிருந்து விருந்தினர்கள் வருகை தருகின்றனர். இல 34, டீ,ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரியில் அமைந்துள்ள இந் நிறுவனத்தை அண்டியதாக ஏராளமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உயர் ரக உணவகங்கள், பேரங்காடித் தொகுதிகள் அமைந்துள்ளன. “Bally's Casino, it’s all about you, our guest.” எனும் தொனிப்பொருளின் கீழ் செயற்படும் இந் நிறுவனம் எப்பொழுதும் விருந்தினர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இலங்கை நிறுவனமான Bally’s Colombo சுமார் 1200 பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கிறது. பொலிவூட் நடச்த்திரங்கள் அடிக்கடி இங்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதோடு விருந்தினர்களை குஷிப்படுத்துவதற்கு இந் நிறுவனம் திறமையான நடன, பாடல் மற்றும் இசைக் கலைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ள Bally’s Colombo அண்மையில் விஷேட பிரமுகர்களுக்கே (VIP) என ஒதுக்கப்பட்ட புதிய நிலையமொன்றை Paiza எனும் பெயரில் திறந்துள்ளது. இங்கு வரும் விருந்தினர்களுக்கு பிசினஸ் கிளாஸ் விமானப் பயணச் சீட்டுக்கள், விமான நிலையத்திலிருந்து தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்வதற்கு சொகுசு போக்குவரத்து வசதிகள், கொழும்பு நட்சத்திர ஹோட்டலொன்றில் சகல வசதிகளுடனான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அனுபவிக்க முடியும்.