வணிகம்
புத்தாண்டுப் பருவத்தில் Unimo ஆரம்பித்துள்ள “Unimo Brand New Avurudu Drive” சலுகை

Mar 20, 2025 - 10:41 AM -

0

புத்தாண்டுப் பருவத்தில் Unimo ஆரம்பித்துள்ள “Unimo Brand New Avurudu Drive” சலுகை

ஐந்து வருடங்களாக நாட்டில் நிலவிய வாகன இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் மோட்டார்வாகனத் துறையில் மறுமலர்ச்சிக்கு வித்திடும் வகையில் “Unimo Brand New Avurudu Drive” என்ற புத்தாண்டுப் பருவ சலுகையை Unimo Enterprises Ltd நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது. Perodua மற்றும் JMC வாகனங்கள் ஏற்கனவே பெருமளவில் கையிருப்பில் உள்ளதுடன், இப்புத்தாண்டில் தம்முடைய பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதியவற்றை வாங்கிக் கொள்வதற்கு இலங்கை மக்கள் பெருமளவில் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்கு Unimo தயாராக உள்ளது. 

போட்டி நிறுவனங்கள் பல இன்னமும் வாகனங்களுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளும் கட்டத்தில் காணப்படும் நிலையில், Perodua AXIA SE Hatchback, Perodua AXIA G Hatchback, Perodua Bezza G Sedan, Perodua Aruz X SUV, JMC Vigus Pro Double Cab மற்றும் JMC Truck உள்ளிட்ட வாகனங்கள் ஏற்கனவே Unimo ன் கையிருப்பில் உள்ளதுடன், இந்த உயர் தர மோட்டார் வாகனங்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகவே பெற்றுக்கொள்ள முடியும். மேலும், நிலைபேற்றியல் கொண்ட போக்குவரத்து வழிமுறைகள் மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில், Seres 3 மற்றும் Dayun DY3 உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான (EV) முன்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. 

இலங்கையின் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாகத் திகழ்ந்து வருகின்ற Unimo, தனது புத்தம்புதிய Perodua வாகனங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ உத்தரவாதத்தை வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த சேவை மற்றும் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய உதவும் வகையில் நாடளவியரீதியில் விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பையும் கொண்டுள்ளது. 

United Motors Lanka PLC நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Unimo Enterprises Ltd, இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் இக்குழுமம் கொண்டுள்ள 80 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தின் வரப்பிரசாதத்தைக் கொண்டுள்ளது. கண்டி, நுகேகொடை, மாத்தறை, குருணாகல், பொரளை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்ட வலுவான வலையமைப்பின் துணையுடன், சந்தையில் ஒரு முக்கிய தொழிற்பாட்டாளராக Unimo தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது. 

“Unimo Brand New Avurudu Drive” என்ற புத்தாண்டுப் பருவகால சலுகையானது இலங்கையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எவ்விதமான காலதாமங்களுமின்றி தமது பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியவற்றை உடனடியாகவே பெற்றுக்கொள்வதை உறுதி செய்யும் அதேசமயம், அதிநவீன EV வாகனங்களுக்கான முன்பதிவுகளையும் முற்கூட்டியே மேற்கொள்ளவும் முடியும். அதன் சிறந்த இருப்பு மற்றும் விசாலமான கையிருப்பு ஆகியவற்றின் துணையுடன், தனது வாடிக்கையாளர்களின் மோட்டார் வாகனத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் Unimo மிகச் சிறந்த ஸ்தானத்தில் உள்ளது. 

ரூபா 8,250,000/- என்ற விலை முதற்கொண்டு இவை கிடைக்கப்பெறுகின்றன. மேலும் விபரங்களுக்கு 0776789270 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05