Mar 20, 2025 - 10:47 AM -
0
இலங்கையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்குகின்ற முதலாவது சர்வதேச விமானசேவையான FitsAir, மலேசியாவின் கோலாலம்பூர் மாநகருக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்து பிராந்தியங்களுக்கு இடையிலான ஆகாய போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தியுள்ளதுடன் நாட்டில் சிக்கனமான கட்டணங்களில் கிடைக்கப்பெறும் விமான சேவை என்ற தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
2025 ஏப்ரல் 4 முதல் கோலாலம்பூருக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்ரூபவ் வாரந்தோறும் நான்கு (04) சேவைகள் இடம்பெறவுள்ளன. சிக்கனமான கட்டணங்களுடன்ரூபவ் நம்பிக்கைமிக்க விமானப் போக்குவரத்தினை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில்ரூபவ் அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான இவ்விமானசேவையின் முயற்சிகளை இந்த விஸ்தரிப்பு பிரதிபலிப்பதுடன் பிராந்திய விமான சேவைகள் துறையில் ஒரு முக்கிய தொழிற்பாட்டாளர் என்ற தனது ஸ்தானத்தையும் இதன் மூலமாக மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் தனது சேவைகளை மேம்படுத்தி மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் முயற்சிகளை FitsAir தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில் கோலாலம்பூருக்கான விமான சேவைகளின் ஆரம்பம் மிகவும் முக்கியமான ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளது. இப்புதிய மார்க்கமானது வர்த்தகம் உல்லாசப் பிரயாணம் மற்றும் போக்குவரத்து தொடர்பில் மகத்தான வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதுடன் விமானப் போக்குவரத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு சிக்கனமான கட்டணங்களில் அவற்றை வழங்குவதில் இவ்விமானசேவை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விமானசேவையின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் கோலாலம்பூருக்கான இரு வழிச் சேவையை ரூபா 65,300 என்ற விசேட அறிமுக சலுகைக் கட்டணத்துடன் FitsAir வழங்குகின்றது. 20 கிலோ பிரயாணப் பொதி மற்றும் கையில் எடுத்துச் செல்லும் 7 கிலோ பொதி ஆகியவற்றுடன் அனைத்தும் உள்ளடங்கிய இக்கட்டணம் அறவிடப்படுவதுடன் நிம்மதியான பிரயாண அனுபவத்தை உறுதி செய்கின்றது.
இப்புதிய சேவையுடன் தனது வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தி தனது பிரயாணிகளுக்கு சிக்கனமான நிம்மதியான பிரயாணத் தெரிவுகளை FitsAir தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. விமானசேவையின் வலையமைப்பானது மாலே டுபாய் டாக்கா மற்றும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களுடன் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருவதுடன் கொழும்பிலுள்ள பிரதான மையத்தினூடாக மேற்குறிப்பிட்ட மாநகரங்களுக்கிடையிலான இடைவிடாத இணைப்புச் சேவைகளையும் வழங்குகின்றது. பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றின் மீது அதீத கவனத்துடன் நம்பகமான குறித்த நேரம் தவறாத சேவைகளை வழங்குவதில் FitsAir தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
மேலதிக விபரங்களுக்கும் முன்பதிவுகளை மேற்கொள்ள www.fitsair.com என்ற இணையத்தளத்தை நாடவும்.