Mar 20, 2025 - 10:56 AM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதன் தொடர்ச்சியான ஆதிக்க நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, இதற்கிணங்க மொத்த காப்புறுதி கட்டுப்பண வருமானமாக ரூ. 37.14 பில்லியனையும் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானமாக ரூ.65.54 பில்லியனையும் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனமானது தொடர்ச்சியாக 21 வது வருடமாக தனது சந்தை தலைமைத்துவத்தை தக்க வைத்துள்ளது.
காப்புறுதி கட்டுப்பண வருமானமானது 11.16 சதவீத சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதேவேளை முதலீட்டு வருமானமாக ரூ.28.4 பில்லியன் பதிவு செய்யப்பட்டமை 1.5 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலித்தது, இதன் விளைவாக டிசம்பர் 31, 2024 இல் முடிவடைந்த 12 மாதங்களுக்கான நிறுவனத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின்படி, ஆண்டுக்கான ஒருங்கிணைந்த வருமானம் 6.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தின் வளர்ச்சியானது மொத்த எழுதப்பட்ட காப்புறுதி கட்டுப்பண வருமானத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலையில், செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனத்தை விட 5.5 பில்லியனுக்கும் அதிகமான வித்தியாசத்தில் இலங்கையின் மிகப்பாரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக தனது நிலையைத் தக்கவைத்துள்ளமையை உறுதிப்படுத்துகிறது.
செலிங்கோ லைஃப்பின் நிறைவேற்றுத் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் கருத்துத் தெரிவிக்கையில், புள்ளிவிபரங்கள் எமது நிலையை எடுத்துச் சொல்கின்றன. இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் எமது மூன்றாவது தசாப்தத்தின் சந்தைத் தலைமைத்துவத்தின் முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளோம். செலிங்கோ லைஃப் நிறுவனமானது நிதியியல் பலம் மற்றும் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது, அதன் வர்த்தகத்தின் அடிப்படை பெறுமதிகள் மற்றும் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிப்பது மற்றும் சமூகத்திற்கான அதன் ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன. செலிங்கோ லைஃப் நிறுவனமானது மதிப்பாய்வுக்கு உட்பட்ட ஆண்டில் காப்புறுதிதாரர்களுக்கு நிகர உரிமைகோரல்கள் மற்றும் நலன்களாக ரூ. 25 பில்லியனை செலுத்தியது, இது முந்தைய ஆண்டை விட 8.2 சதவீதம் அதிகமாக திகழ்வதுடன் மேலும் ரூ. 23 பில்லியனை அதன் ஆயுள் நிதியத்திற்கு பரிவர்த்தனை செய்தது. இதன் விளைவாக, ஆயுள் நிதியமானது 31 டிசம்பர் 2024 நிலவரப்படி குறிப்பிடத்தக்க வகையில் 14.8 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 180.89 பில்லியனை பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் 250 பில்லியன் (ரூ. 251.43 பில்லியன்) என்ற மைல்கல்லைக் கடப்பதற்கு நிறுவனத்தின் மொத்தச் சொத்துகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாதாந்தம் சராசரியாக ரூ. 2.2 பில்லியன் என்ற ரீதியில் 26.69 பில்லியனால் அல்லது 11.8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது, அதேவேளை, அதன் முதலீட்டு பிரிவானது 2024 டிசம்பர் 31 இல் முடிந்த 12 மாதங்களில் 12.32 சதவீதம் அதிகரித்து மொத்தமாக ரூ. 222.5 பில்லியனாக இருந்தது.
2024 நிதியாண்டில் நிறுவனமானது வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 10.05 பில்லியனைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 19.1 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. மதிப்பாய்வு செய்யப்பட்ட 12 மாதங்களில் வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூ. 7.07 பில்லியன் ஆகும், இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 21.88 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியது.
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.