உலகம்
பிளாப் மீனுக்கு நியூசிலாந்து சுற்றுச்சூழல் அமைப்பு கௌரவம்

Mar 20, 2025 - 11:27 AM -

0

பிளாப் மீனுக்கு நியூசிலாந்து சுற்றுச்சூழல் அமைப்பு கௌரவம்

உலகின் அசிங்கமான மீன் எனப்படும் பிளாப் மீன் (Blob fish), நியூசிலாந்தின் இந்த ஆண்டுக்கான மீனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

நியூசிலாந்தின் சுற்றுச்சூழல் அமைப்பான மலை முதல் கடல் வரையிலான பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய வாக்கெடுப்பில், பிளாப் மீனை பாதுகாக்க அதிக ஓட்டுகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உடல் முழுவதும் வழுவழுப்பாக இருக்கும் இந்த மீன், ஒரு அடி நீளம் வளரக்கூடியது என்றும், அவுஸ்திரேலியா கடற்பகுதிகளில் 2,000 முதல், 4,000 அடி ஆழத்தில் வாழ்கிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05