Mar 20, 2025 - 12:17 PM -
0
அமானா வங்கி அதன் நீண்ட கால முதலீட்டு-தர தரப்படுத்தலான BBB+ ஐ உறுதியான புறத்தோற்றப்பாட்டுடன் கொண்டிருப்பதாக லங்கா ரேட்டிங் ஏஜென்ஸி (LRA) வழங்கியுள்ளது. LRA சுயாதீன கடன் தரப்படுத்தல் முகவர் அமைப்பாக திகழ்வதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளது. LRA இன் அறிவித்தலின் பிரகாரம், இந்தத் தரப்படுத்தலினூடாக, பிரிவின் ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடுகையில், அமானா வங்கியின் உறுதியான சொத்தின் தரம், மேம்படுத்தப்பட்ட மூலதனம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வினைத்திறன் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மூன்றாம் காலாண்டில் காணப்பட்டவாறு, அமானா வங்கி துறையின் மிகவும் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க விகிதமான 1.4% ஐ பதிவு செய்திருந்தது. அதனூடாக உறுதியான கடன் இடர் முகாமைத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன், வங்கி சிறந்த CASA விகிதமான 42.3%ஐ யும் எய்தி, தொழிற்துறையில் நியமத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மைல்கல் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “வங்கி தனது நிலையை நம்பிக்கை வாய்ந்த மற்றும் மீண்டெழும் திறன் படைத்த நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனம் என்பதாக உறுதி செய்யும் காலகட்டத்தில் இந்த தரப்படுத்தல் கிடைத்துள்ளது. அதனூடாக எமது நிதிசார் வலிமை வெளிப்படுத்தப்படுவது மாத்திரமன்றி, நிலைபேறான வளர்ச்சியும் உறுதி செய்யப்படுகின்றது. அத்துடன், எமது பிரசன்னத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகளும் திறக்கப்பட்டு, எமது சேவை வழங்கல்கள் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். அதனூடாக எமது பங்காளர்களுக்கு சிறந்த பெறுமதி உருவாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் மற்றுமொரு முதலீட்டு-தர தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம், இம்முறை LRA இடமிருந்து பெற்றுள்ளதுடன், வங்கியின் உறுதித் தன்மை மற்றும் மீட்சி ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கௌரவிப்பினூடாக பிரதான அளவீடுகளில் எமது உறுதியான வினைத்திறன் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதற்கான எமது ஆற்றலையும் காண்பித்துள்ளது. இந்த தரப்படுத்தலினூடாக எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு வழிகோலப்பட்டுள்ளதுடன், எமது நிலையை மேலும் வலுப்படுத்தவும் உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கிக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தரப்படுத்தலில் முதலீட்டு தர BBB-(lka) உறுதியான புறத்தோற்றப்பாட்டை கொண்டிருப்பதாக வழங்கப்பட்டிருந்ததுடன், வங்கியின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.