Mar 20, 2025 - 01:44 PM -
0
NDB வங்கியானது இலங்கை இளைஞர்களை அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை பயணங்களில் மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், உத்தியோகப்பூர்வ வங்கி பங்குதாரராக கல்விக் கண்காட்சி 2025 [Educate Expo 2025] இணைந்து கொண்டதில் பெருமையடைகிறது. மார்ச் 7 முதல் 9 வரை கொழும்பு,BMICH இல் நடைபெற்ற இந்த கல்விக்கண்காட்சி 2025ஆனது , மாணவர்கள், பெற்றோர்கள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுகல்வி ஆலோசகர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்த ஒரு முதன்மையான கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு கண்காட்சியாக திகழ்ந்தது.
இலங்கையின் கல்வி நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக, Educate Expo 2025 ஆனது மாணவர்கள் பரந்த அளவிலான கல்வி வாய்ப்புகள், தொழில் பாதைகள் மற்றும் உலகளாவிய கல்வி வாய்ப்புகளை ஆராயக்கூடிய ஒரு துடிப்பான தளமாக செயல்பட்டது. இந்த நிகழ்வு வளர்ந்து வரும் கல்வி யுக்திகள் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்கியதுடன் இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தகவலறிந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு உதவியது.
NDB வங்கி உயர்கல்வியில் நிதி ஆதரவின் முக்கிய பங்கை உணர்ந்து, இந்த தளத்தை மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கான அதன் முதன்மை தீர்வான NDB Student File-ஐ அறிமுகப்படுத்தியது. வெளிநாட்டு கல்வி நிதியுதவியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட NDB Student File, மாணவர்கள் தங்கள் கல்வி கனவுகளை இலகுவாகத் தொடர முடியும் என்பதை உறுதி செய்கிறது. இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான NDB வங்கியின் உறுதிப்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெளிநாடுகளில் கல்வியைத் தொடர திட்டமிடும் மாணவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பானது ஒரு தடையற்ற, முழுமையான நிதியியல் தீர்வை வழங்குகிறது.
Educate Expo 2025 இல் NDB வங்கியின் அரங்கினைப் பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வங்கியின் நிதியியல் நிபுணர்களுடன்கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றனர், அத்துடன் NDB Student File ஆனது வெளிநாட்டுக் கல்வியில் எதிர்நோக்கும் நிதி சவால்களை எவ்வாறு சமாளிக்க உதவும் என்பது பற்றிய நேரடி நுண்ணறிவுகளையும் அவர்கள் பெற்றனர். இந்த திட்டம் பல பிரத்தியேக நன்மைகளை வழங்குகிறது, அவற்றில் முதல் செலுத்தும் கட்டணத்தில் OTT கட்டணத்திற்கு கழிவு , பாடநெறி கட்டணத்தில் 75% வரை உள்ளடக்கிய NDBயின் கல்விக் கடன் மற்றும் கல்வி கற்கும் காலத்தில் நிதியியல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக AIA வழங்கும் விரிவான காப்புறுதித் திட்டம் ஆகியவை அடங்கும்.
மேலதிகமாக, மாணவர்கள் NDB கடனட்டைகள் மூலம் 12 மாதங்களுக்கு மேல் செலுத்த வேண்டிய விசா செயலாக்கக் கட்டணங்களுக்கான 0% தவணைத் திட்டம் மூலமும், ISIC உறுப்புரிமை மூலம் உலகளாவிய ரீதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மூலமும் பயனடையும் வாய்ப்பினைபெறுகிறார்கள். மூலோபாய பங்குடமைகள் மற்றும் புதுமையான நிதியியல் தீர்வுகள் மூலம், இலங்கையின் இளைஞர்களை மேம்படுத்துவதில் NDB வங்கி உறுதியாக உள்ளது. அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைய தேவையான வளங்களையும் ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவதன் மூலம், இளைஞர்கள் எப்போதும் மாறிவரும் உலகில் விருத்தியடைந்து முன்னோக்கிச் செல்ல தயாராக இருப்பதை உறுதி செய்வதை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.