Mar 20, 2025 - 01:49 PM -
0
மிகவும் பிரபலமடைந்துள்ள புறநகர் குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான VIMAN Ja- Ela ஆனது மற்றுமொரு சாதனை மைல்கல்லினை நிலைநாட்டும் வகையில், பணிகளின் 3 ம் கட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறித்து John Keells Properties நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில், அதில் 60% பங்கானது திறந்த வெளிகள் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள வகையில், துடிதுடிப்பான, சூழல் மீது அக்கறை கொண்ட சமூகத்தைத் தோற்றுவித்து, நவீன வாழ்வு மற்றும் இயற்கையின் இடைவிடாத இணைப்பை வழங்கும் வகையில் VIMAN Ja-Ela ஆனது மிகவும் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய பகுதியில் அமைந்துள்ள பூங்கா, முற்றம் மற்றும் ஜா-எல நகரம் ஆகியவற்றின் அழகிய பின்னணிக் காட்சிகளை வழங்கும் வகையில் மிகவும் நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட இரு புதிய அடுக்குமனை வளாகங்கள் 3 ம் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இச்செயற்திட்டத்தின் வெற்றி குறித்து, John Keells Properties நிறுவனத்தின் துறைத் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிறைவேற்று உப தலைவருமான இனோக் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில்:
“எமது VIMAN Ja-Ela செயற்திட்டத்தின் 1 ம் மற்றும் 2 ம் கட்டங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மகத்தான வரவேற்பினால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள நாம், 3 ம் கட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம். 2024 ஆகஸ்டில் அத்திவாரமிடப்பட்டு, வெறும் ஆறு மாதங்களில், மிகவும் ஆர்வமூட்டும் ஒரு காலப்பகுதியில் இந்த அறிமுகம் இடம்பெறுவதுடன், VIMAN Ja-Ela செயற்திட்டத்தில் அடுக்குமனைகளை வாங்குவதில் கொள்வனவாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருவதை எடுத்துக்காட்டுகின்றது. ஜா-எல மத்தியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதுடன், கொழும்பு நகரத்துடன் இடைவிடாத போக்குவரத்து இணைப்பையும், சமூகத்தை மையமாகக் கொண்ட வாழ்வில் கவனத்தையும் செலுத்தியுள்ள VIMAN Ja-Ela செயற்திட்டம், மிகவும் ஈர்ப்பான ஒரு முதலீட்டு வாய்ப்பாகும். புறநகர் வாழ்வு என்றால் என்ன என்பதற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, எமது குடியிருப்பாளர்களுக்கு வளம் கொழிக்கும், மற்றும் சிறப்பான வகையில் பிணைப்பைக் கொண்ட சமூகத்தைத் தோற்றுவிப்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
3 ம் கட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற அடுக்குமனைகளை வாங்குவதற்கான முன்பதிவுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், பிணைப்பும், இணக்கமும் கொண்ட சமூகத்தை வளர்ப்பதில் வலுவான அர்ப்பணிப்பையும், சமகால வடிவமைப்பையும் இடைவிடாது ஒருங்கிணைத்து, புறநகர் வாழ்விற்கு புதிய தரஒப்பீட்டு நியமங்களை VIMAN Ja-Ela தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது. இந்த
அடுக்குமனைகளை வாங்க விரும்புகின்றவர்கள் அல்லது வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் கொழும்பிலுள்ள மாதிரி அடுக்குமனையை நேரடியாக வந்து பார்வையிட முடியும் என்பதுடன், இந்த அடுக்குமனை செயற்திட்டம் வழங்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் தொடர்பான ஆழமான அறிவு மற்றும் கொள்வனவு நடைமுறை தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளை முதலீட்டு ஆலோசகர்களைக் கொண்ட அர்ப்பணிப்பு அணியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.
VIMAN Ja-Ela குறித்த மேலதிக விபரங்களை www.viman.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதனூடாகவோ, அல்லது 0706 068 068 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக John Keells Properties நிறுவனத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாகவோ அறிந்து கொள்ள முடியும்.
VIMAN by John Keells Properties தொடர்பான விபரங்கள்
Creating New Worlds” (புதிய உலகங்களைத் தோற்றுவித்தல்) என்ற John Keells Properties நிறுவனத்தின் நோக்குடன், ஆறு ஏக்கர் நிலப்பரப்பில், 60% பங்கானது திறந்தவெளி வசதிகளைக் கொண்டதாக, மிகவும் கவனமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட VIMAN Ja-Ela ஆனது நவீன வாழ்வுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது. துடிதுடிப்பான ஜா-எல நகரத்தின் மத்தியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள VIMAN, கொழும்பு கோட்டைக்குச் செல்லும் நெடுஞ்சாலைக்கு விரைவாகச் செல்லும் வீதி மார்க்கத்துடன், ஜா-எல மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் 30 நிமிடத்தில் பிரயாணம் செய்வதையும் உறுதி செய்கின்றது. பச்சைப்பசேல் பின்னணிகள் மற்றும் மத்திய பூங்கா ஆகியவற்றைக் கொண்டுள்ள VIMAN Ja-Ela ஆனது தியானம் செய்யும் திடல்கள், சிறுவர்கள் விளையாடும் பகுதி, வெளிப்புற விளையாட்டுத் திடல், சைக்கிளோட்ட/நடைப்பயிற்சித் தடம் உள்ளிட்ட 10 வகையான, கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள வசதிகளுடன், குடும்பங்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கு உகந்த சூழலுடன், குடியிருப்பாளர்கள் புத்துணர்வையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பதற்கான அமைதியான சரணாலயத்தைத் தோற்றுவிக்கின்றது.