செய்திகள்
சகல கிராமங்களுக்கும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

Mar 20, 2025 - 01:58 PM -

0

சகல கிராமங்களுக்கும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிக திறமைகொண்ட தொழிலாளர்களை அனுப்புவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் சமமான வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். 

எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நேற்று (19) பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 344,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இஸ்ரேல் அரசின் கட்டுமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர் கொண்ட முதல் குழு நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. 

கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற நடைமுறைப் பரீட்சைகளின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குழு, இந்த வருடம் ஜனவரியில் இஸ்ரேலுக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான குலுக்கல் சீட்டிலுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, இதன் ஊடாக 5 வருடங்கள் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05