Mar 20, 2025 - 04:03 PM -
0
கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஐசிசி தடை விதித்தது.
இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமுலுக்கு வருவதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

