செய்திகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

Mar 20, 2025 - 05:41 PM -

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று (20) யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

 

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

 

பல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆர்வமுடன் இத்தேர்தலில் பங்கெடுக்கின்றமை தெரிகிறது.

 

ஆனாலும் இன்று நாட்டின் சூழலைக் கருத்திற்கொண்டு, விசேடமாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்திருக்கும் நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் இருப்பை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் தமது வாக்குப்பலத்தை பிரயோகிக்கும்போது செய்திகளை சொல்வார்கள்.

 

வடக்கு கிழக்கு மக்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி இறைமையின் அடிப்படையிலான வாக்குரிமையை உபயோகிக்கும் போது இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்கின்றோம் அதைப் பலமாக எடுத்தியம்புகிறோம் என்கின்ற செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என வினயமாக வேண்டுகிறது எனத் தெரிவித்தார்.

 

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அமோகமான ஒரு ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. கட்சிகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது.

 

ஆனாலும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி உட்பட்ட தமிழ்க் கட்சிகளுக்கு வாக்குகள் குறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம். இதிலிருந்து மீண்டெழுந்து தமிழ்த்தேசம் என்று நாம் அழைக்கின்ற தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி தமது சொத்து என எடுத்தியம்புவதற்கு இத்தேர்தல் ஒரு தலையாய சந்தர்ப்பம் அதனை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05