செய்திகள்
பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

Mar 20, 2025 - 05:50 PM -

0

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.  

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05