செய்திகள்
உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Mar 20, 2025 - 08:16 PM -

0

உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப. 5.40 மணி முதல் பி.ப. 7.10 மணி வரை இடம்பெற்றது. அதனையடுத்து, குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டமூலம் 2025 மார்ச் 1 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. 

அத்துடன், உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 2 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05