செய்திகள்
"Clean Sri Lanka" திட்டம் தொடர்பில் அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

Mar 20, 2025 - 11:19 PM -

0

"Clean Sri Lanka" திட்டம் தொடர்பில் அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

"Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் உரிய நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்டட் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இன்று (20) நடைபெற்றது. 

அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயற்படுத்தப்படும் "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 05 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஒதுக்கீடுகளுக்காக பயனுள்ள வகையில் அமைச்சுக்களினால் வழங்கப்பட்டிருக்கும் திட்ட அறிக்கை மற்றும் அதற்காக மேற்கொள்ளக்கூடிய நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. 

அதேபோல் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை (சுகாதார பாதுகாப்பு) மேம்படுத்தல், வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தல் மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் ஊடகங்களினால் மேற்கொள்ளக்கூடிய பணிகள், சுற்றுலா தொழில்துறைக்கு அமைவாக வழிகாட்டல்களை தயாரித்தல்,வாடகை வாகன ஓட்டுநர்களின் அணுகுமுறை மற்றும் ஒழுக்க ரீதியான நடத்தையை மேம்படுத்தல்,போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தலுக்கு அமைவான நிலைபேறான திட்டத்தை தயாரித்தல், மகாவலி உயர் நீர்பிடிப்பு பகுதிகளில் மணல் பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்தல், மகாவலி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், உள்ளிட்ட சமூக மற்றும் சுற்றாடல், ஒழுக்க கட்டமைப்பின் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அரச நிருவாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு, வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நிதி ஆணைக்குழு, சுற்றுலா அதிகார சபை, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் தேசியச் சபை,மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05