Mar 21, 2025 - 09:54 AM -
0
கொமர்ஷல் வங்கியானது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிரைக் கொண்டாடும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ‘அணகி’ மகளிர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் குத்தகை ஆகியவற்றுக்கான ஆவணக் கட்டணங்களை 50% ஆல் குறைப்பதுடன் மேற்படி கடன் வகைகளுக்கு விசேட குறைந்த வட்டி வீதங்களை வழங்கவுள்ளது.
மார்ச் மாதத்தில் தங்கள் அணகி டெபிட் மற்றும் கடனட்டைகளைப் பயன்படுத்தி வர்த்தக நிறுவனங்களில் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50மூ வரை பிரத்தியேக விலைக்கழிவுகளை வழங்குவதற்காக 60க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி தனது மகளிர் வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட பிற முயற்சிகளில் 14 பிராந்தியங்களில் ‘அணகி’ வர்த்தக கண்காட்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் அடங்கும், இதன் விளைவாக 500க்கும் மேற்பட்ட மகளிர், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதுடன் மேலும் வர்த்தக கண்காட்சிகளில் 200 அரங்குகளில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தினர். வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) வாடிக்கையாளர்களில் சுமார் 50மூ மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வர்த்தக கண்காட்சிகள் பத்தரமுல்ல-தியத உயன, மொரட்டுவ- K Zone மற்றும் வங்கியின் கண்டி, குருநாகல், செங்கலடி மற்றும் யாழ்ப்பாணக் கிளைகள் போன்ற இடங்களில் நடத்தப்பட்டன. நிதியியல் கல்வியறிவு, வர்த்தக முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் திறன்களை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு, காலி, கதுருவெல, மத்துகம மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.
மக்கள் தமது வாழ்க்கையில் ஊக்கமளிக்கும் பெண்களைப் பற்றி நேரடியாகப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, பிரபலமான வானொலி நிலையங்களுடன் வங்கி இணைந்து பணியாற்றியது. மேலும், ஹவ்லொக் சிட்டி மோல், வன் கோல்ஃபேஸ் மோல் (OGF) மற்றும் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையில் அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கியது.
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைக்கப்பட்ட முயற்சிகள் வங்கியின் பெண் ஊழியர்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தன. அவர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அறிவுப் பகிர்வு அமர்வில், பிரதம செயற்பாட்டு அதிகாரி (APAC இன் தலைவர்), 5 Hour International Corporation திருமதி கஸ்தூரி வில்சன்; தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர் ஃபிரதம நிறைவேற்றதிகாரி திருமதி சஷி கண்டம்பி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் சிரேஷ்ட வங்கியாளர் திருமதி அருணி குணதிலக உள்ளிட்ட தொழில்துறையில் புகழ்பெற்ற பெண் தலைவர்களின் ஊக்கமளிக்கும் விவேகமான ஆலோசனைகளும் இடம்பெற்றன. வெளியூர் கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மெய்நிகர் முறையில் இணைய வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் இது பரவலான பங்கேற்பையும் உறுதி செய்தது.