Mar 21, 2025 - 11:05 AM -
0
விஜய் நடிப்பில் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் 2025 ஒக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபகாலமாக இப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் அரசியல்வாதியாக மாறியுள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் விஜய் சினிமாவை விட்டு விலகும் தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் விஜயின் முந்தைய படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்படுவது தான் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி விஜயின் சச்சின் திரைப்படம் 2025 கோடையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
அதாவது கடந்த 25 ஆம் ஆண்டு விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் சச்சின் திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில் விஜய் சச்சின் கதாபாத்திரத்திலும், ஜெனிலியா ஷாலினி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தினை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த நிலையில் ஜான் மகேந்திரன் இதனை இயக்கியிருந்தார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். தற்போது இந்த படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து வருகின்ற ஏப்ரல் 18ஆம் திகதி ரீ -ரிலீஸ் ஆகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.