Mar 21, 2025 - 01:20 PM -
0
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலி நோக்கி சுமார் 60 அகதிகளுடன் சென்ற ஒரு ரப்பர் படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், இத்தாலிய கடலோர காவல்படை 6 பேரின் உடல்களை மீட்டுள்ள நிலையில், மாயமான 40-க்கும் மேற்பட்ட அகதிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் கடந்த 19 ஆம் திகதியன்று நிகழ்ந்ததாகவும், படகு துனிசியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்டு இத்தாலியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.