Mar 21, 2025 - 01:41 PM -
0
நாட்டுக்கு போசணையளிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ள இலங்கையின் உணவுத் தயாரிப்புத் துறையின் முன்னணியாளரான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தனது வருடாந்த விற்பனை மாநாடு 2025 ஐ அண்மையில் நடத்தியது. நாடளாவிய ரீதியில் உள்ள நிறுவனத்தின் விற்பனை சக்தியை ஒன்றிணைத்து, சிறப்பாக செயற்பட்டவர்களை அங்கீகரிப்பதற்கும், எதிர்வரும் ஆண்டுக்கான மூலோபாய திட்டத்தை வெளியிடும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024ஆம் ஆண்டில் நிறுவனம் அடைந்த வெற்றிகள் குறித்து விரிவான மதிப்பாய்வு மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான மூலோபாய முயற்சிகள் குறித்த விபரங்கள் அடங்கிய விரிவான விளக்கமும் இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டன.
இந்த மாநாட்டின் மூலம் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் வெற்றிகளைக் கொண்டாடியதுடன், 2025 ஆம் ஆண்டில் புதிய உயரங்களை எட்டுவதற்குப் பலமான அணியை உருவாக்கும் ஒரு அடித்தளத்தையும் ஏற்படுத்தியது.
சந்தையின் முக்கிய பிரிவுகளில் உற்பத்திகளின் விற்பனை அளவை அதிகரிப்பதற்கு சிறப்பாகப் பணியாற்றிய கம்பனியின் விற்பனை நிபுணர்களைக் கௌரவிக்கும் தளமாகவும் இந்த மாநாடு அமைந்தது. 2024 ஆம் ஆண்டில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் சந்தையில் பெற்றிருக்கும் ஸ்தானத்தை கணிசமாக வலுப்படுத்துவதற்குப் பங்களித்த விதிவிலக்கான நபர்கள் மற்றும் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விற்பனை நிர்வாகிகளிடையே ஒட்டுமொத்தமாக கூடிய சதவீத அதிகரிப்பிற்கான கௌரவ விருதை ஆர்.ரவி பிரகாஷ் பெற்றுக் கொண்டதுடன், கூடுதலான விற்பனை அதிகரிப்பை வெளிப்படுத்திய பிராந்திய விற்பனை முகாமையாளர் கே.ரி.டி அஜித் வசந்த குமார தந்திரிகே அங்கீகரிக்கப்பட்டார். சிந்தக தர்ஷன ராஜபக்ஷ தலைமையில், நந்தன ரொஷான் தர்ஷன, பி.சந்திரமோகன், கே.டி.சம்பிக உதேஷ் மற்றும் டபிள்யூ.ஏ.எஸ்.ஜே துஷார ஆகியோரைக் கொண்ட குழு 2024ஆம் ஆண்டில் அதிக தொகையை விற்பனை செய்த விற்பனைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டது.
பிரிவுகள் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில் பேக்கரிப் பிரிவுக்கான சிறந்த விற்பனை நிர்வாகியாக சந்தியசீலன் ஹரிஹரனும், சிறந்த பிராந்திய முகாமையாளராக எம்.எஸ்.மொஹமட் நயீமும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். தின்பண்டப் பிரிவுகளில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய இன்சமாம் நுக்மன் ஹஜ்ரின் ரஷீட் மற்றும் டபிள்யூ.ஈ.சந்திம பிரியதர்ஷன ஏக்கநாயக்க ஆகியோர் விருது பெற்றனர்.
பொதுவான வணிகம் மற்றும் சிறப்பான வணிகங்களைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக பி.துஷான லங்கா பீரிஸ் விசேட விருதினைப் பெற்றார். களப்பணியாளர்களுக்கான NVQ Level 4 தர பயிற்சிகளில் குறிப்பிட்ட பங்களிப்பைச் செலுத்திய தர்ஷன அபேவர்தன ஜயவிக்ரம பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டர்.
Postgraduate Institute of Management நிறுவனத்தின் பயிற்சியாளர் PIM பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் மூலோபாய பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த குழுவின் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்டமை இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமைந்தது. துறைசார் மேம்பாட்டில் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதை இது எடுத்துக்காட்டியது. ஆண்டு முழுவதும் உத்வேகத்தையும் மன உறுதியையும் பராமரிப்பது தொடர்பில் புகழ்பெற்ற தன்முனைப் பேச்சாளர் ஃபஹத் ஃபாரூக் ஈடுபாடு நிறைந்த அமர்வை முன்னெடுத்தார். இது விற்பனைக் குழுவினரை ஊக்கப்படுத்தும் மெறுமதிமிக்க விடயங்களை வழங்கியது.
2025ஆம் ஆண்டை முன்னோக்கிப் பார்க்கும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்திற்கு இந்த மாநாடு மற்றொரு வெற்றிகரமான சாதகமான ஆண்டிற்கான ஆரம்பமாக அமைந்தது. திறமையான விற்பனை அணியின் மூலம் சரியான திசையில் பயணித்து, புதுப்பிக்கத்தக்க உந்துதலுடன் அனைத்து சந்தைப் பிரிவுகளிலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நிறுவனம் கொண்டுள்ளது. சிறப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்ட தரமான கோதுமை மா தொழில்துறையில் காணப்படும் கேள்வியைப் பூர்த்திசெய்யும் வகையில் உயர்தர 7 ஸ்டார் கோதுமை மாவை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தயாரித்து வருகின்றது.