வணிகம்
உலக நீர் தினத்தில் 30 வருட கால நீர்ச்சேர்ப்பு சிறப்பை கொண்டாடும் American Premium Water

Mar 21, 2025 - 02:01 PM -

0

உலக நீர் தினத்தில் 30 வருட கால நீர்ச்சேர்ப்பு சிறப்பை கொண்டாடும் American Premium Water

உலக நீர் தினத்தில், தூய நீரின் முக்கியத்துவத்தை உலகம் அனுஷ்டிக்கும் நிலையில், இலங்கையின் முன்னணி போத்தலில் அடைக்கப்பட்ட நீர் வர்த்தக நாமம் எனும் வகையில் தனது 30 வருட பூர்த்தியை American Premium Water கொண்டாடியது. மூன்று தசாப்த காலமாக, நீர்ச்சேர்ப்பு வழங்குனராக மாத்திரம் திகழாமல், ஒவ்வொரு துளியிலும் தூய்மை மற்றும் தரத்தை வழங்கும் நம்பிக்கையை வென்ற பங்காளராகவும் அமைந்துள்ளது. 

இந்த ஆண்டு உலக நீர் தின தொனிப்பொருளாக, Glacier Preservation,அமைந்திருப்பதுடன், அதனூடாக உலக தூய நீர் வளங்களை பாதுகாப்பதற்கான அவசியம் உணர்த்தப்படுகிறது. தாதுப்பொருட்கள் நிறைந்த 200 அடி ஆழமான கிணற்றிலிருந்து American Premium Water பெறப்படுவதுடன், சூழல் வழிகாட்டல்களை உறுதி செய்வதுடன், தூய்மையையும் உறுதி செய்கிறது. சமூகங்கள் மற்றும் சூழல்கட்டமைப்புகளுக்கு அனுகூலம் சேர்க்கும் வகையில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை பொறுப்புடன் பேணுவதை வர்த்தக நாமம் ஊக்குவிக்கிறது. 

American Premium Water இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி பயாஸ் பசால் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் நீரை போத்தலில் அடைப்பது மாத்திரமன்றி, நம்பிக்கை, சுகாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்துக்கான அர்ப்பணிப்பையும் அதில் சேர்க்கிறோம். 30 வருடங்களுக்கு மேலாக, தூய்மை மற்றும் சிறப்பு போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக நாம் அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு துளியிலும் ஆரோக்கியமான வாழ்வு ஊக்குவிக்கப்படுகிறது. உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அத்தியாவசியமானது என்பதுடன் ஆரோக்கியமான நீர்ச்சேர்ப்பினூடாக தனிநபர்கள் ஊக்குவிக்கப்படுவதாக நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த மைல்கல்லை நாம் கொண்டாடும் நிலையில், மக்களுக்கும் புவிக்கும் அனுகூலமளிக்கும் நிலைபேறான செயன்முறைகளில் நாம் எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளோம்.” என்றார். 

American Liquid Packaging Systems Inc. உடனான பங்காண்மையினூடாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த வர்த்தக நாமம், மூன்று தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக இலங்கையில் நவீன தூய்மைப்படுத்தல் தொழினுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. இன்று, தேசத்தின் முதல் தர போத்தலில் அடைக்கப்பட்ட நீர் வழங்குனராக திகழ்வதுடன், வசிப்பிடங்களில் நம்பிக்கையை வென்ற நீர்ச்சேர்ப்பு நாமமாகவும் அமைந்துள்ளது. தரம், சேவை, சிறப்பு, நேர்மை மற்றும் அணிச் செயற்பாடு போன்றவற்றின் அடிப்படையில் அதன் வெற்றிகரமான செயற்பாடுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. 

புதிய தோற்றம்: புதிய வர்த்தக நாம அடையாளம் மற்றும் “iCan” செயற்திட்டம் இந்த மைல்கல்லை குறிக்கும் வகையில், American Premium Water புதிய வர்த்தக நாம அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய வர்த்தக சின்னம், நீர்த்துளி அடையாளத்தை கொண்டிருப்பதுடன், தற்போது அதில் ‘A,’ ஐயும் சேர்த்துள்ளது. அதனூடாக, தூய நீரின் திறன் உணர்த்தப்பட்டுள்ளது. அதன் வான்நீல வர்ணத்தினால் நம்பிக்கை, புத்துணர்வு மற்றும் நலன் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. 

நிறுவனம் “iCan”திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, இலங்கையர்கள் மத்தியில் மீட்சி மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறது. வலிமை மற்றும் நீடிப்பு போன்றவற்றுக்கான அடித்தளமாக நீர்ச்சேர்க்கை அமைந்திருப்பதை மீளுறுதி செய்து, நபர்களை சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்வதற்கு ஊக்குவிக்கிறது. 

நிலைபேறாண்மை மற்றும் சமூக தாக்கம் 

நீர்ச்சேர்ப்புக்கு அப்பால், சமூக மற்றும் சூழல் பங்களிப்புகளில் American Premium Water பெருமளவு பங்களிப்பு செலுத்துகிறது. கடந்த தசாப்த காலத்தில், வசதிகள் குறைந்த சமூகங்களுக்கு 800,000 லீற்றர்களுக்கு அதிகமான குடிநீரை நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், 1.6 மில்லியனுக்கு அதிகமான நபர்களை ஆரோக்கியமான மற்றும் செயற்திறனான வாழ்க்கை முறையை பேண வலுவூட்டியுள்ளது. அதன் 45% ஊழியர்கள் பெண்களாக அமைந்திருப்பதுடன், அதில் 36% ஆனவர்கள் தலைமைத்துவ பொறுப்புகளில் உள்ளதனூடாக நிறுவனம் பாலின சமத்துவத்தில் அர்ப்பணிப்பை கொண்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 640 பேரை நிறுவனம் நேரடியாக பணிக்கு அமர்த்தியுள்ளதுடன், 3000 க்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூழல் பொறுப்புணர்வுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், American Premium Water இனால் 2013 ஆம் ஆண்டில் நிலைபேறான கண்ணாடி போத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. கடந்த தசாப்த காலத்தில் பிளாஸ்ரிக் கழிவுகளை குறைக்கும் வகையில் 360 மெட்ரிக் டொன் பிளாஸ்டிக்களை மீள்சுழற்சிக்குட்படுத்தியிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 90க்கும் அதிகமான அநாதரவு இல்லங்களுக்கு ஆதரவளிக்கும் Orphancare உடனான பங்காண்மையினூடாக, நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு போத்தலிலிருந்தும், ஒரு பகுதியை இந்தத் திட்டத்துக்காக பங்களிப்புச் செய்து, குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, ஊக்குவித்து, வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 

எதிர்கால நோக்கு 

நம்பிக்கையை வென்ற நீர்ச்சேர்க்கையில் மூன்று தசாப்தத்தை பூர்த்தி செய்யும் American Premium Water முன்னணி நீர்ச்சேர்ப்பு தீர்வுகள், நிலைபேறாண்மையை பின்பற்றல் மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்தல் போன்றவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05