Mar 21, 2025 - 05:46 PM -
0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் தற்போது உரையாற்றி வருகிறார்.
வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும், தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணிக்கு விவாதம் ஆரம்பமான நிலையில் மாலை 6:00 மணிக்கு விவாதம் முடிவடைந்த பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பிற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

