சினிமா
அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

Mar 21, 2025 - 05:55 PM -

0

அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமா அதிகம் கவனிக்கும் இயக்குனர்களில் ஒருவர்.

 

எனது சினிமா பாணி இதுதான், இப்படி தான் எனது படங்கள் இருக்கும் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் காட்டிக்கொண்டு இருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என 5 படங்களை இயக்கியுள்ளார்.

 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

அடுத்தடுத்து மாஸ் நடிகர்களுடன் கூட்டணி அமைத்து பிஸியாக படங்கள் இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் புதிய பட நடிகர் குறித்து ஒரு தகவல் உலா வருகிறது.

 

அதாவது லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமா நடிகருடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் ராம் சரணுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05