செய்திகள்
ஹீத்ரோ விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Mar 22, 2025 - 08:01 AM -

0

ஹீத்ரோ விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ முழுவதுமாக நேற்றைய தினம் மூடப்பட்டது.


இதனால், நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.


மின்சாரம் மீட்கப்பட்ட பின்னர், மார்ச் 21 அன்று மாலை முதல் விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கின.


இன்று முதல், விமான நிலையம் முழு அளவிலான சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அடுத்த சில நாட்களுக்கு குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05