செய்திகள்
மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

Mar 22, 2025 - 11:11 AM -

0

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம்  ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் பதிவாகியுள்ளது. 

 

இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. 

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 
 

அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 - மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது. 

கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05