செய்திகள்
சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன்

Mar 22, 2025 - 01:16 PM -

0

சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மேயர் வேட்பாளராக ஹசன்

சர்வஜன அதிகாரம் சார்பாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

தெஹிவளை பகுதியில் நேற்று (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05