செய்திகள்
தேசபந்துவுக்கு விசேட பாதுகாப்பு

Mar 22, 2025 - 06:48 PM -

0

தேசபந்துவுக்கு விசேட பாதுகாப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஒரு நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

பின்னர் அவரின் பிணை விண்ணப்பம் மாத்தறை நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

2023 டிசம்பர் 31, அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ