Mar 23, 2025 - 11:01 AM -
0
போப் பிரான்சிஸ் இன்று (23) ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார் என்றும், வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி கடுமையான சுவாச தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் விளைவாக இரட்டை நிமோனியா ஏற்பட்டது.
கடந்த ஐந்து வாரங்களில் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வந்தார். இரண்டு தடவை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை போப் சந்தித்தார்.
போப் முழுமையாக குணமடையவில்லை, ஆனால் இப்போது நிமோனியா இல்லை, இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அவரது வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை அவர் வீட்டில் இருப்பார் என்று இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம் என்று வைத்தியசர் அல்ஃபியேரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்னர் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள தனது ஜன்னலிலிருந்து போப் ஒரு ஆசீர்வாதத்தை வழங்குவார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பொதுவில் தோன்றுவார்.