Mar 23, 2025 - 01:11 PM -
0
காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து விலகிய லக்னோ அணி வீரர் மோசின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மோசின் கானுக்கு மாற்று வீரராக இந்திய முன்னணி வீரரான ஷர்துல் தாகூர் லக்னோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே லக்னோ அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்துல் தாகூரை கடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்திருந்தார். தற்போது லக்னோ நிர்வாகம் அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.