விளையாட்டு
சக்கர நாற்காலியில் இருந்தாலும்... CSK அணியில் விளையாடுவேன்

Mar 23, 2025 - 01:55 PM -

0

சக்கர நாற்காலியில் இருந்தாலும்... CSK அணியில் விளையாடுவேன்

10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3ஆவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் விளையாடுவார் என்பது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார். 

43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05