Mar 23, 2025 - 05:32 PM -
0
வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் என நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் கால்பந்து சின்னம் சுயேச்சைக் குழு தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பகுதியில் உள்ள அவரது அலவலகத்தில் இன்று (23) நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச் சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இது ஒரு பாரிய அநீதி. பிரதேச சபை அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் நிச்சயம் இவைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.கட்டாக்காலி மாடுகள் நாய்கள் வீதிகளில் அதிகளவாக காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு செல்வோமாயின் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடுவோம். இது தவிர கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு அறிவிப்போம். அவ்வாறு எமது சபையின் ஊடாக விடுக்கப்படும் அறிவுறுத்தலை மீறும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
பிரதேச சபை விதித்துள்ள வரிகளை குறைப்பதே திட்டம். மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
--